தேசிய செய்திகள்

நக்சலிசம் ஒழிக்கப்பட்ட முதல் தீபாவளி; பிரதமர் மோடி பெருமிதம்

தீபாவளி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராய்ப்பூர்,

நாட்டில் நக்சலிசம் ஒழிக்கப்பட்ட முதல் தீபாவளி இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தீபாவளி

இந்து மத பண்டிகையான தீபாவளி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாலையே குளித்து, புத்தாடை உடுத்தி, கோவில்களுக்கு சென்று கடவுள்களை வழிபட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புப்படையினருடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரதமர் மோடி பாதுகாப்புப்படையினருடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.

சத்தீஷ்கார் மாநிலம் பஸ்டர் பகுதியில் உள்ள பாதுகாப்புப்படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடி வருகிறார்.

தீபாவளி கொண்டாட்டத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது,

மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் 2014ம் ஆண்டு முதல் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த உடன் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தகர்க்க அரசியல் நிலைத்தன்மை மேலும் வலிமைபடுத்தியது.

நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்ல நாட்டின் எதிரிகளை வலிமையாகவும், சரியான திட்டமிடலுடனும் வீழ்த்த வேண்டும். அதை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு 2014ம் ஆண்டு முதல் வலிமைப்பெற்றது.

நக்சலைட்டுகள் தாக்குதலால் நமது வீரர்கள் பலர் உயிரிழப்பதை நாம் கடந்த பல ஆண்டுகளாக பார்த்துவந்தோம். ஆனால், கடந்த 47 ஆண்டுகளில் முதல் முறையாக புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு நக்சலைட்டு தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இது அரசின் கொள்கைகள், தைரியம் மற்றும் உறுதிப்பாட்டு நிறைந்த பாதுகாப்புப்படையினருக்கு கிடைத்த வெற்றியாகும். நக்சலிசம், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பல ஆண்டுகால போராட்டத்தில் நாடு வெற்றிபெற்ற பின் வரும் முதல் தீபாவளி இதுவாகும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்பட்டு கொண்டாடும் முதல் தீபாவளி இதுவாகும்

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT