தேசிய செய்திகள்

மத்திய மந்திரி சபையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு; நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த திட்டம்

மத்திய மந்திரி சபையில், தற்போது முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இல்லை. ஆகவே அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

புதுடெல்லி,

இம்மாத கடைசியில் மத்திய மந்திரி சபையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. 2 மந்திரிகளுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படவில்லை. இதற்கிடையே நவராத்திரி சமயத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவும் பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014-ஆம் ஆண்டு பதவியேற்றார். 2019-ல் நடந்த தேர்தலிலும் பா.ஜ.க.வே வெற்றி பெற்று தொடர்ந்து பிரதமராக நீடித்தார்.2024-ஆம் ஆண்டுதேர்தலிலும் பா.ஜ.க. அணி வென்றது. இதன் மூலம் பிரதமர் மோடி 3-ஆவது முறையாக அந்தப் பதவியில் உள்ளார். அவர் பொறுப்பேற்ற பின் னர் பெரிய அளவில் மந்திரி சபை மாற்றங்கள் நிகழவில்லை. சிறிய அளவிலேயே மாற்றங்கள் நிகழ்ந்தன.

மந்திரி சபையை மாற்றியமைக்க முடிவு

இந்த நிலையில் ஒரளவு பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி செய்ய இருப்பதாக சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவர் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பயணம் சென்றிருந்தார். திரும்பி வந்த பிறகு இந்த மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்தநிலையில் அவர் மந்திரி சபையை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இந்த மாற்றம் இந்த மாத கடைசியில் அதாவது அக்டோபர் 25-க்குப் பிறகு நடக்கலாம் என கூறப்படுகிறது.

2 இணை மந்திரிகளுக்கு வாய்ப்பு இல்லை

ஏற்கனவே பஞ்சாபைச் சேர்ந்த ரவ்நீத் சிங்பிட்டு மற்றும் கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன் ஆகிய 2 பேர் இணை மந்திரிகளாக இருந்தார்கள். அவர்களது எம்.பி. பதவி கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. அவர்களுக்கு

வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் ராஜினாமா செய்தார்கள்.

பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு

கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லியில் போராட் டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்குப்பதிலாக புதிய மந்திரி நியமிக்கப்படவில்லை. மாறாக அவரது இலாகா,பிரகலாத் ஜோஷியிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி மற்றும் பி.எல்.வர்மா ஆகிய 2 பேரின் எம்.பி. பதவி விரைவில் முடிய உள்ளது. இவர்கள் இருவரும் உ.பி. மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

பழையவர்களுக்கு இடமில்லை

உ.பி. மாநிலத்தில் 10 ராஜ்ய சபை எம்.பி.க்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் மேலே கூறப்பட்ட2 மந்திரிகளும் அடங்குவர். அங்கு பா.ஜ.க. மூலம் & எம்.பி. க்களை தேர்வு செய்ய முடியும். இதற்காக அக்டோபர் 16-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

அந்த 8 இடத்திற்கும் புதியவர்களை வேட்பாளர்களாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. பழையவர்களுக்கு இடமில்லை. ஆகவே ஹர் தீப்சிங் பூரிக்கும், பி.எல். வர்மாவுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆகவே அந்த இரு வரும் மந்திரிகளாக நீடிக்க முடியாத நிலை உள்ளது.

4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்

ஆகவே மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆகவே இந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மந்திரிகள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மந்திய மந்திரி சபையில் அதிகபட்சம் 81 பேர் இடம் பெறமுடியும். தற்போது 68 பேர்மட்டுமே உள்ளார்கள். அதில் 29 பேர் கேபினட் அந்தஸ்தில் உள்ளனர். 5 பேர் துணை மந்திரிகளாக உள்ளார்கள். 34 பேர் சுதந்திரமான முறையில் இணை மந்திரிகளாக உள்ளார்கள்.

மந்திரி சபையில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பு

மத்திய மந்திரி சபையில், தற்போது முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இல்லை. ஆகவே அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அமித்ஷா, ஜே.பி. நட்டா, சிவராஜ்சிங் சவு கான், நிர்மலா சீதாராமன், மனோகர்லால் கட்டா, பிரக லாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்களை வைத்துள்ளார்கள். அவர்களிடம் உள்ள கூடுதல் இலாகாக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஹர்தீப் சிங் பூரிக்கு 80 வயது ஆகிவிட்டது. அடுத்து அந்த மாநிலத்தில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது. ஆகவே அவர் பஞ்சாப் மாநில அரசியலுக்கு திருப்பி விடப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்

இது ஒருபுறம் இருக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவும் மத்திய அரசுஉறுதியாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் இணைந்து தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டன. ஆகவே மழைக் காலகூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. - ஆனால் அப்போது நீட் முறைகேடுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்ததால் எதுவும் செய்யப்படவில்லை. இருந்தாலும் மழைக்கால கூட்டத் தொடர்முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை. எனவே எந்த நேரத்திலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்படலாம் என்ற செய்தி அவ்வப்போது பரவி வந்தது.

இந்த நிலையில் நவராத் திரிவிழா சமயத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT