தேசிய செய்திகள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்; பிரதமர் மோடி

தீபாவளி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி,

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி

இந்து மத பண்டிகையான தீபாவளி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாலையே குளித்து, புத்தாடை உடுத்தி, கோவில்களுக்கு சென்று கடவுள்களை வழிபட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி வாழ்த்து

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துகள். வரும் காலங்களில் உங்கள் அனைவருக்கும் அமைதி, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சி அமையட்டும். உங்களைப்போல் நானும் தீபாவளியை புத்துணர்ச்சியுடன் கொண்டாடுகிறேன். இந்த முறையையும் நான் தீபாவளியை பாதுகாப்புப்படையினருடன் கொண்டாட உள்ளேன்’ இவ்வாறு அவர் கூறினார்.

அந்த வகையில் பிரதமர் மோடி சத்தீஷ்காரில் உள்ள பஸ்டர் பகுதியில் பாதுகாப்புப்படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். பஸ்டர் பகுதி நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்ட நிலையில் அப்பகுதியில் பணியாற்றி வரும் பாதுகாப்புப்படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

SCROLL FOR NEXT