புதுடெல்லி
1936ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள், ஒடியா மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒடிசா தனி மாநிலமாக உருவானது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
உத்கல திவசா எனும் இந்த சிறப்பு தருணத்தில் வாழ்த்துக்கள். ஒடிசா மாநிலம், கலாச்சார மற்றும் ஆன்மீக பெருமையின் காலத்தால் அழியாத சின்னமாக திகழ்கிறது. ஒடியா இசை, கலை மற்றும் இலக்கியம் இந்தியாவை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளன.
தங்களின் உறுதி, எளிமை மற்றும் அன்பிற்காக அறியப்படும் ஒடிசா மக்கள், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளனர். வரும் காலங்களில் ஒடிசா முன்னேற்றத்தின் புதிய சிகரங்களை தொடர்ந்து எட்டட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.