தேசிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் மயங்கி விழுந்த விமானப்படை வீரரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர்

ஜனாதிபதி மாளிகையில் மயங்கி விழுந்த விமானப்படை வீரரின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். #PmModi

புதுடெல்லி,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஷெஷல்ஸ் தீவின் அதிபர் டானி ஃபௌர் ஆறு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். தலைநகர் புதுடெல்லி வந்திறங்கிய டானி ஃபௌருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரும் ஷெசல்ஸ் அதிபரை வரவேற்றனர். தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அதிபர் டானி ஃபௌர்-க்கு அளிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் காலையில் கடுமையான வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தால், அணி வகுப்பு மரியாதை செய்த இந்திய விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார். வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து வீரர் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இதைக் கவனித்த பிரதமர் மோடி, செஷல்ஸ் அதிபர் வரவேற்பு முடிந்த பிறகு, வீரரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் மோடியின் இந்த செயல், சக வீரர்களை நெகிழச்செய்தது.

SCROLL FOR NEXT