டெல்லி,
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. நிர்வாக ரீதியாகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டும் பாஜக அவ்வப்போது கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறது.
அந்த வகையில் பாஜகவில் தேசிய துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்பட முக்கிய பதவிகளுக்கு 65 பேரை கட்சி தலைமை கடந்த 17ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், பாஜகவில் நியமிக்கப்பட்ட 65 புதிய பொறுப்பாளர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இளம் தலைமுறையினரிடம் பாஜகவின் கொள்கைகளை கொண்டு சேர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பின்னர் , புதிய பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.