தேசிய செய்திகள்

பிரதமர் மோடி மலேசியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம்

இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மறுஆய்வு மேற்கொள்வார்கள்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி மலேசியா நாட்டுக்கு 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மலேசியாவுக்கு 3-வது முறையாக அவர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தின்போது, மலேசிய ​​பிரதமர் அன்வர் இப்ராகிமை நேரில் சந்தித்து அவருடன் பிரதமர் மோடி ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, இந்திய சமூகத்தினர் மற்றும் தொழில், வணிக பிரதிநிதிகளுடனும் அவர் உரையாடுவார்.

இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மறுஆய்வு மேற்கொள்வார்கள்.

SCROLL FOR NEXT