ரஷிய அதிபர் புதின்  
தேசிய செய்திகள்

ரஷிய அதிபர் புதின் 11-ந்தேதி இந்தியா வருகை

இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அவர், 11-ந்தேதி பிர தமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு

இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் உச்சி மாநாடு வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெறும் நிலையில், 11-ந்தேதி அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்புகள் நடைபெற உள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க இருப்பதை ரஷிய அரசின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று உறுதி செய் தார். இந்தியாவுக்கு வரும் புதின், 11-ந்தேதி பிரதமர் மோடியை டெல்லி யில் சந்தித்து பேசுவார் என்றும் அவர் தெரிவித்தார். இரு தலைவர்களும் முதலில் பிரிக்ஸ் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறித்து ஆலோசிப்பார்கள் என்றும், பின்னர் இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் கூறினார்.

வர்த்தகம், பாதுகாப்பு குறித்து பேச்சு

பிரதமர் மோடி புதின் சந்திப்பில் வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகா ரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷியாவிடம் இருந்து எஸ்.யு.-57 ரக போர் விமானங்களை இந்தியா வாங்குவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெறலாம் என்று பெஸ்கோவ் தெரிவித்தார்.

பிரதமர் மோடியும், புதினும் கடைசியாக கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி கிர் கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சந்தித்தனர்.

பாதுகாப்பு ஒத்திகை

பிரிக்ஸ் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள் ளதை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.

தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று ஜவகர்லால் நேரு மைதானம், ராஜ்காட், பாரத் மண்டபம் மற்றும் ராணுவ போலோ மைதானம் உள் ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகளை மேற் கொண்டனர்.

SCROLL FOR NEXT