தேசிய செய்திகள்

பிரதமர் மோடிதான் முதலில் வெளிநாடு சுற்றுப்பயணத்தை தவிர்க்க வேண்டும்: பஞ்சாப் முதல்-மந்திரி

எங்கோ நடக்கும் போருக்கு நம் நாட்டில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார்.

சண்டிகர்,

பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலமும் பெட்ரோல்-டீசல் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி, அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பதற்கான ஒரு திட்டத்தை அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இதை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.

இந்தநிலையில், பொதுமக்களை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் மோடிதான் முதலில் வெளிநாடு சுற்றுப் பயணத்தை தவிர்க்க வேண்டும்.

மக்களை வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் என கூறும் அவரால் வீட்டில் இருந்து ஏன் பணியாற்ற முடியவில்லை? எங்கோ நடக்கும் போருக்கு நம் நாட்டில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT