தேசிய செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார்.

டெல்லி,

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றது. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.

தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தவெக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.