தேசிய செய்திகள்

புதுச்சேரிக்கு மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி வருகை

சமீபத்தில் காரைக்காலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா வந்து சென்றார்.

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளது.

தேர்தலை முன்னிட்டு, கடந்த 14-ந்தேதி புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மந்திரி அமித்ஷா, இந்த தேர்தலிலும் கூட்டணி தொடரும் என உறுதிப்படுத்தி, பேசி விட்டு சென்றார்.

இந்நிலையில், மார்ச் 1-ந்தேதி புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளார். இதுபற்றி அக்கட்சியின் புதுச்சேரிக்கான பா.ஜ.க. தலைவர் நிர்மல் குமார் சுரானா நிருபர்களிடம் பேசும்போது, சமீபத்தில் காரைக்காலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா வந்தபோது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருடைய வருகை மக்களுக்கு நல்ல செய்தியை அளித்தது என கூறினார். இந்நிலையில், லாஸ்பேட்டையை ஒட்டிய ஹெலிகாப்டர் தரையிறங்க கூடிய மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

அப்போது பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி அறிவிப்பார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என சுரானா கூறினார்.