தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை மேற்கு வங்காளம் பயணம்

கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள 3 புதிய போர் கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

கொல்கத்தா,

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாளை மேற்கு வங்காளம் செல்கிறார். அவர் ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெறும் மேற்கு வங்காள தினத்தில் பங்கேற்கிறார்.

இதையடுத்து, நாடு முழுவதும் 9.44 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பி.எம்.கிசான் திட்டத்தின் 23வது தவணை தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் விகிதம் ரூ. 18 ஆயிரத்து 880 கோடியை விடுவிக்கிறார்.

இதையடுத்து அன்றைய தினமே ஒடிசா செல்லும் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் இணைந்து மயுர்பஞ்ச் மாவட்டம் பஹத்பூர் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் மேற்கு வங்காளம் செல்லும் பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள 3 புதிய போர் கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.