டெல்லி,
பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானியை பிரதமர் மோடி சந்தித்து ஆசி பெற்றார்.
பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். 2014-ம் ஆண்டு மே மாதம் வரை குஜராத் முதல்-மந்திரியாக இருந்த அவர், அதன்பின்னர் பிரதமராக பொறுப்பேற்றார். அவர் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, பிரதமர் மோடி அரசு பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
பிரதமர் மோடி 25 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தலைவராக பணியாற்றியதை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானியை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். அப்போது, எல்கே அத்வானியிடம் பிரதமர் மோடி ஆசிபெற்றார். பிரதமர் மோடி அரசு தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியதை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக எல்கே அத்வானி வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசிபெற்றார்.