தேசிய செய்திகள்

போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என போலீசார் மிரட்டுகிறார்கள்: அபிஜீத் தீப்கே குற்றச்சாட்டு

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை போலீசார் மிரட்டுவதாக அபிஜீத் திப்கே குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் போராட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 2-ந்தேதி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் வருகிற 10-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத் தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை போலீசார் மிரட்டி வருவதாக அக்கட்சி தலைவர் அபிஜீத் திப்கே குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் நேற்று நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

நோட்டீஸ்

மராட்டிய மாநிலம், சந்திராப்பூர் மாவட்ட போலீசார் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என எங்கள் கட்சித்தொண்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் டெல்லி சென்று வருவதற்கான பயண செலவுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் கேள்வி எழுப்பி நெருக்கடி கொடுக்கின்றனர். போராட்டம் வன்முறையாக மாறும் என்று போலீசார் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர். போராட்டம் வன்முறையாக வெடிக்கும் என்று போலீசாருக்கு முன்கூட் டியே எப்படி தெரியும்?. இதற்காக அவர்கள் ஏதேனும் சதித்திட்டம் தீட்டியுள்ளார்களா?.

சர்வாதிகார போக்கு

சந்திராப்பூரிலிருந்து ஒருவர் டெல்லிக்கு செல்வதில் போலீசாருக்கு என்ன பிரச் சினை?. ரூ.1,000 அல்லது ரூ.1,500 கொடுத்து ஒருவரால் ரெயில் டிக்கெட் வாங்க முடியாதா?. போலீசாரின் செயல் அப்பட்டமான சர்வாதிகார போக்கு.பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது வெறும் முழக்கம்தான். அவர்களின் உண்மையான நோக்கம் 'ஒரே நாடு, ஒரே அரசியல் கட்சி' என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT