தேசிய செய்திகள்

உல்லாசத்திற்கு வர மறுப்பு; கள்ளக்காதலி கழுத்தை நெரித்து படுகொலை - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

தொழிற்சாலையில் வேலை செய்த நானே சாகேப் என்பவருடன் அஷிதாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா ஜிகினி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரும், அஷிதா என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

அஷிதா ஜிகினியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அஷிதாவுக்கு, அவரது தொழிற்சாலையில் வேலை செய்த நானே சாகேப்(வயது 28) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அடிக்கடி தனிமையில் உல்லாசம்

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும், பல்வேறு இடங்களுக்கு சென்றும், நானே சாகேப்பில் அறையிலும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து கணவர் மற்றும் 2 குழந்தைகளையும் உதறிவிட்டு கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் அஷிதா, வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் பாதா ளம்மா லே-அவுட் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி நானே சாகேப், அஷிதாவை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நானே சாகேப், அஷிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

காதலனுக்கு வலைவீச்சு

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, இதுபற்றி ஜிகினி போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே அஷிதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார் அஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, தப்பி ஓடிய கள்ளக்காதலன் நானே சாகேப்பை வலைவீசி தேடி வருகின்றனர்.