தேசிய செய்திகள்

நாட்டை விட்டு வெளியேற போலீஸ் நோட்டீஸ்: நடிகர் இம்ரான்கான் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை

இம்ரான்கான் தரப்பில் ஆஜரான வக்கீல் மனுவை நாளை(இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினர்.

மும்பை,

அவர் தனது மனுவில், அந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. நான் பொதுவெளியில் பிரபலமான நபர் என்பதால் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் நடிகர் இம்ரான்கான்

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக மும்பையில் நடந்த போராட்டத்தில் இந்தி நடிகர் அமீர்கானின் உறவினரும், நடிகருமான இம்ரான்கான்(வயது43) பங்கேற்றார்.

இந்தநிலையில் அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் சட்டங்களை மீறியதாகக் கூறி வருகிற 28-ந் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை போலீசார் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் நடிகர் இம்ரான்கான் மனு தாக்கல் செய்தார்.

இன்று விசாரணை

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இம்ரான்கான் தரப்பில் ஆஜரான வக்கீல் மனுவை நாளை(இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினர். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்

அவர் தனது மனுவில், "அந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. நான் பொதுவெளியில் பிரபலமான நபர் என்பதால் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு, எவ்வித காரணமும் இன்றி வருகிற 28-ந் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது. எனவே, போலீசார் அனுப்பிய இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். அதுவரை என் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT