கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டம் ஹப்ரா பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் பிஸ்வநாத் சென் என்ற போலீஸ் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பிஸ்வநாத் சென் இன்று காலை காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறையில் இருந்து வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிஸ்வநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார், பிஸ்வநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் பிஸ்வநாத் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.