தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல் : தொலைக்காட்சியில் கமர்சியல் விளம்பரங்களை விட அதிக அளவில் விளம்பரம் செய்யும் பாஜக

5 மாநில தேர்தல்களை அடுத்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. தொலைக்காட்சி விளம்பரத்தில் பாஜக முதலிடத்தில் உள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கான ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. சுவர் விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள் என அனைத்து வகையிலும் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரச்சாரத்தில் ஒரு அங்கமாக தொலைக்காட்சி விளம்பரங்களில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. தொலைக்காட்சி விளம்பரத்தில் பாஜக தொடர்பான விளம்பரங்கள் முதலிடத்தில் உள்ளன. BARC வெளியிட்டுள்ள பட்டியலில் 22,099 புள்ளிகளில் பாஜக அதிக விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.( நவம்பர்10-16 ) அடுத்தப்படியாக நெட்பிலிக்ஸ், டிரிவாகோ, சந்தூர் சாண்டல் சோப் , டெட்டால் சோப் , அமேசான் பிரேம் வீடியோ, ஆயூர் பேஸ் கிரீம்,கோல்கேட் கமர்சியல் விளம்பரங்கள் ஆகியவை பட்டியலில் உள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள BARC சிஇஓ, கடைகோடி மக்களும் தொலைக்காட்சியுடன் இணைந்திருக்கின்றனர். ஆகையால் அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி விளம்பரங்களை கையில் எடுக்க தொடங்கியுள்ளன என தெரிவித்தார்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் குறித்த கேள்விக்கு பாஜகவின் தலைமை ஊடக பிரிவு தலைவர் அனில் பலூனி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். கட்சி சார்ந்த விளம்பங்களில் பாஜக மட்டுமே பட்டியலில் இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

SCROLL FOR NEXT