தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார் - ராணுவ மருத்துவமனை

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என ராணுவ மருத்துவமனை கூறி உள்ளது

புதுடெல்லி

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப், சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தெடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.