லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியதில் கர்ப்பிணி உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலக் (வயது 24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் அவர் 4 மாதங்கள் கப்பமாக இருந்தார்.
இந்நிலையில், ரக்ஷா பந்தனையொட்டி பாலக் கடந்த திங்கட்கிழமை தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் இன்று இரவு குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு உணவு சாப்பிட சென்றுள்ளார்.
ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு ஓட்டலுக்கு வெளியே இருந்த ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு சாலையோரம் நின்று அனைவரும் சாப்பிட்டிக்கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் கர்ப்பிணி பாலக் உள்பட குடும்ப உறுப்பினர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பால்க் உள்பட 10 பேரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அனைவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குஅனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணி பாலக் சிக்சிசை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஷிவம் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.