தேசிய செய்திகள்

இந்தியாவில் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி பட்டியல்: மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது

இந்தியாவில் 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி பட்டியல் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டிரம்ப் 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் இடையே அமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வருகை தருவதால், அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறைப் பயணமாக வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிப் பட்டியலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விவரம் வருமாறு:

பிப்ரவரி 24 திங்கள்

காலை 11.40 மணி: ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார், டிரம்ப்

மதியம் 12.15 மணி: சபர்மதி ஆசிரமம்

மதியம் 1.05 மணி: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்பு

பிற்பகல் 3.30 மணி: ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்பாடு

மாலை 4.45 மணி: ஆக்ரா சென்றடைதல்

மாலை 5.15 மணி: தாஜ்மகாலை பார்வையிடுதல்

மாலை 6.45 மணி: டெல்லிக்கு விமானத்தில் புறப்பாடு

இரவு 7.30 மணி: டெல்லி போய்ச்சேருதல்

பிப்ரவரி 25 செவ்வாய்

காலை 10 மணி: ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு

காலை 10.30 மணி: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி

காலை 11 மணி: ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சு

மதியம் 12.40 மணி: ஒப்பந்தங்கள் கையெழுத்து, பத்திரிகையாளர் சந்திப்பு

இரவு 7.30 மணி: ஜனாதிபதியுடன் சந்திப்பு, விருந்து

இரவு 10 மணி: இந்திய பயணம் முடிந்து புறப்பாடு.

இதனை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையெட்டி, ஆமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT