தேசிய செய்திகள்

ஜனாதிபதி முர்மு உடன் உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

டெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சந்தித்தார்.

முர்மு - அமித்ஷா சந்திப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா. இவர் மத்திய கூட்டுறவுத்துறையையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஜனாதிபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT