டெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்முவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இன்று சந்தித்தார்.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின். இவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்தித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற நிதின் நபின் ஜனாதிபதி முர்முவை சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று நான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரின் இயல்பான நடத்தை மற்றும் நாட்டுக்கு சேவை செய்வதில் உள்ள உறுதியான அர்ப்பணிப்பு நமக்கு பெரும் பாடங்களை கற்பிக்கின்றன. ஜனாதிபதியின் வழிகாட்டுதல் நாட்டுக்கும் சமூகத்திற்கும் உயர்வு ஏற்படுத்த தொடர்ந்து உழைக்க நமக்கு புது ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.