தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒடிசாவின் ராய்ரங்பூர் மற்றும் தனது சொந்த மாவட்டமான மயூர்பஞ்சிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் விடுக்கப்பட்டிருக்கும் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவரது இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வானிலை சாதகமாக இல்லாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், மயூர்பஞ்ச் மாவட்ட நிர்வாகத்தின் தகவல்படி, பயணம் ரத்து செய்யப்படவில்லை. மாறாக மறுதிட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி முர்மு நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மயூர்பஞ்சிற்குப் பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையக்கூடும் என்றும், இது அக்டோபர் 28-ம் தேதி காலை வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT