புதுடெல்லி
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி ராஜா கூறியதாவது:-
, நாங்கள் தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளுடன் பேசி வருகிறோம். இது தொடர்பாக நான் சோனியா காந்தியை சந்தித்தேன். அவரும் பொது வேட்பாளரை நிறுத்துவதில் உடன்பட்டிருக்கிறார்; நாங்கள் அனைவரும் ஒன்று போலவே சிந்திக்கிறோம் என்றார்.
தேர்தல் ஜூலை மாதம் நடப்பதால் எங்களுக்கு போதுமான கால அவகாசம் இருக்கிறது. மேலும் பாஜக என்ன நினைக்கிறது என்பதும் தெரியவில்லை. அவர்கள் பலரது பெயர்களை புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எங்களுக்குள் ஒருமித்தக் கருத்து இருக்கிறது. ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்றக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலம் இது. இவ்வாறு அவர் கூறினார்.