தேசிய செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்; நாடாளுமன்ற இல்லத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மலரஞ்சலி

டாக்டர் அம்பேத்கரின் 127வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் இன்று மலரஞ்சலி செலுத்தினர். #PresidentRamnath #PMModi

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பினை இயற்றிய சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 127வது ஆண்டு பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அம்பேத்கருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT