புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
"தேர்தல் கால நிம்மதி முடிந்தது, விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ கிளம்பிவிட்டது. ஏப்ரல் 29-ம் தேதிக்குப் பிறகு கவனித்துப் பாருங்கள் - பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயரும்.
எண்ணெய் விலை மலிவாக இருந்தபோது, மோடி அரசு அந்த லாபத்தைத் தன் பையிலேயே வைத்துக் கொண்டது. இப்போது விலை உயர்ந்திருக்கும் நிலையில், அந்தப் பாரத்தை உங்கள் மீது சுமத்தப்போகிறது.
மலிவான காலத்தில் மக்களைச் சுரண்டிவிட்டு - விலைவாசி உயர்வு வரும்போது மக்களைத் தவிக்கவிடும் அரசு இது".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.