தேசிய செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்க்கு, பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்க்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு, தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.