தேசிய செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளார்: கபில் சிபல் குற்றச்சாட்டு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி தொடர்பாக பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களுடனான உரை என்கிற பெயரில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்று எம்.பி. கபில் சிபல் குற்றஞ்சாட்டினார். இது குறித்து கபில் சிபல் கூறியதாவது: தேர்தல் நடக்கும் போது, பிரதமர் மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமராக இருந்துகொண்டே அரசியல் உரைகளை ஆற்றுகிறார்.

இது இந்திய அரசியலில் ஒரு புதிய வீழ்ச்சி. ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையரோ அல்லது வேறு எந்த அமைப்போ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது எனக்குத் தெரியும். கடந்த காலத்தில் எந்தப் பிரதமரும் இப்படிச் செய்ததில்லை. நீங்கள் தேர்தலில் வெற்றி பெறலாம், ஆனால் அதற்காக ஒரு நிறுவனத்தையே அழித்துவிடக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT