தேசிய செய்திகள்

டிசம்பர் மாதம் பெல்ஜியம் செல்கிறார் பிரதமர் மோடி

இந்த ஒப்பந்தம் சுமார் 200 கோடி நுகர்வோரைக் கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை இரு தரப்பு வணிகங்களுக்கும் உருவாக்கும்.

புதுடெல்லி,

இந்தியா-27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் இடை யே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுதியானது. இதை அமல்படுத்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் முறையாகக் கையெழுத்திடுவதற்காக, பிரதமர் மோடி டிசம்பர் மாதம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சுக்கு பயணம் மேற்கொள்வார் என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா அதிகாரப்பூர்வ மாக அறிவித்தார்.

கனடாவில் உள்ள வெளி யுறவுகள் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அன்டோனியோ கோஸ்டா பங்கேற்றிருந்த போது பிரதமர் மோடியின் பய 'ணம் குறித்து இந்த தகவலை தெரிவித்தார்.

டிசம்பர் 17-ஆம் தேதி பிரஸ்ஸல்ஸில் தொடங்க உள்ள ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்திற்கு முன்னதாகப் பிரதமர் மோடியின் இந்த வருகை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி யின் இந்த பயணம் அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வர்த்தகத் தடைகளைக் குறைப்பதையும், இரு தரப்பு வணிகங்களுக்கும் சந்தை வாய்ப்புகளை மேம் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

இதன் மூலம் இந்தியாவின் ஏற்று மதி மதிப்பில் 99 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் முன்னுரிமை அல்லது வரி இல்லாத அணுகுமுறை கிடைக்கும்.

இது ஜவுளி, தோல் பொருட்கள், மற்றும் ரத்தி னங்கள் மற்றும் ஆபரணங் கள் போன்ற துறைகளுக்குப் பயனளிக்கும். அதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் கணிசமான அளவிற்கு வரி குறைப்பு அல்லது வரி விலக்கு அளிக்கப்படும்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முன்னதாகவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, தற்போது ஒப்பந்தத்தின் இறுதி வரைவு சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் இதுபற்றிக் கூறுகையில், "இரு தரப்பு ஒப்புதல்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் வரும் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (மார்ச் அல்லது ஏப்ரல்) முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT