பெங்களூரு,
உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா மைசூருவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு தினசரி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், டிரோன் கண்கவர் கண்காட்சி, மைசூரு அரண்மனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதை காண தினமும் மைசூருவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த மைசூரு தசரா விழாவின் முத்தாய்ப்பாக ஜம்புசவாரி ஊர்வலம் நாளை நடக்கிறது.
இந்த நிலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். மைசூரு தசரா விழா குறித்த வீடியோக்களை ரீல்ஸ் ஆக எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பினால் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சிறந்த 100 ரீல்ஸ்களுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 'கன்டன்ட் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டியை டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.