மத்திய அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:-கூடங்குளத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக கட்டப்பட்டு வரும் 4 புதிய உலைகளில் முதல் உலை அடுத்த ஆண்டு (2027) ஜூன் மாதம் செயல்பாட்டுக்கு வரும். மற்ற 3 உலை களும் 2030-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இயக்கத்துக்கு வரும்.
கூடங்குளம் அணுமின் திட்டத்தில் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட 4 அணு உலைகளின் மொத்த மதிப்பீட்டு செலவு தற்போது ரூ.1.38 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மதிப்பீட்டை விட 55 சதவீதம் அதிகமாகும். இதில் 2 அணு உலைகளுக்கான திட்டச் செலவு 73 சதவீதமும், மீத முள்ள 2 உலைகளுக்கான செலவு 40 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதற்கு உக்ரைன் போர் காரணமாக கட்டுமானப் பணிகள் சுமார் 3 ஆண்டுகள் தாமதமானதும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்த தும் செலவு அதிகரிக்க முக்கிய காரணமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செலவு அதிகரிப்பால் இந்த அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையும் உயரக்கூடும் என்று எரிசக்தி நிபுணர்கள் எச்ச ரித்துள்ளனர். இருப்பினும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுத்த மான மின் உற்பத்திக்கு அணுசக்தி முக்கியமானதாக இருப்பதால், திட் டங்களை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.