பெங்களூரு,
பெங்களூரு சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏரியில் குதித்து தற்கொலை செய்தார்.
பெங்களூரு சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜூ (வயது 20), தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேஜூ கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்ற தேஜூ மாலை வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, தனது காதலனுக்கு வாட்ஸ்-அப்பில் "எனக்கு வாழப் பிடிக்கவில்லை, தற்கொலை செய்து கொள்கிறேன்" என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சாங்கி ஏரியிலிருந்து தேஜூவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.