தேசிய செய்திகள்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எதிரான வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அகில பாரத இந்து மகாசபையின் முன்னாள் துணைத்தலைவர் சதீஷ்குமார் அகர்வால் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'இது, மாணவர் போராட்டம் என்று சொல்லப்படுவதற்கு எதிரானது. போராட்டக்காரர்கள் டெல்லி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். சாலைகள் மூடப்பட்டுள்ளன. டெல்லி மக்கள் அவதிப்படுகிறார்கள்' என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி உபத்யாயா மற்றும் நீதிபதி தேஜாஸ் கரியா அமர்வில் நேற்று மனுதாரர் சார்பில் வக்கீல் பருண் குமார் சின்கா ஆஜராகி, இந்த வழக்கை நாளை (இன்று) விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை இன்று விசாரிக்க ஒப்புக்கொண்டனர்.

SCROLL FOR NEXT