உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தவர் அங்கிதா பண்டாரி. இவர் 2022ஆம் ஆண்டு ஒரு கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த கொலையில் தற்போது சிக்கிம் கவர்னராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் துஷ்யந்த் கவுதமுக்கும் தொடர்பு இருப்பதாக அங்கிதா பண்டாரியின் பெற்றோர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
எனவே, துஷ்யந்த் கவுதம் தற்போது சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு அங்கிதா பண்டாரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கவர்னருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால், அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுதியிருப்பதாக தெரிகிறது.
கொலை வழக்கில் தொடர்புடைய துஷ்யந்தை கவர்னராக நியமித்ததற்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிதா பண்டாரியின் பெற்றோரை இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். ராகுல் காந்தியுடன் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.