தேசிய செய்திகள்

ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லியில் ராகுல், பிரியங்கா தர்ணா

பேரணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரிகார்டு மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுடெல்லி,

பேரணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரிகார்டு மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அவர் கைது செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாம்பாவிதம் தவிர்க்க பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. கோரிக்கை அடங்கிய பதாகைகளுடன் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அணிவகுத்துச் சென்றனர். பேரணியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலர் பங்கேற்றனர். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பியபடி, தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி சென்றனர்.

தேர்தல் ஆணையம் செல்லும் வழியில், நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அலுவலகம் அருகே எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததால் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் களேபரம் ஏற்பட்டது.

. பின்னர், தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தை அடைய முயன்ற ​​ ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் சில ஆதரவாளர்களுடன் ஆகாஷ்வாணி பவன் வளாகத்தின் கீழ் ஒரு தளத்தில் நுழைந்தனர். முன்னதாக, நிதி ஆயோக் அலுவலகம் அருகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற பிரியங்கா காந்தி வத்ரா, ராகுல் காந்தி மற்றும் பல எம்.பி-க்களை டெல்லி காவல்துறை செல்ல அனுமதி மறுத்தது. இதனையடுத்து, போராட்டத்தை கைவிடுமாறு ராகுல் காந்தியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வாக்கு திருட்டு விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் பேச வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கானுமதிக்கக்கோரி டெல்லியில் ராகுல், பிரியங்கா ஆகியோர் 5 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி சென்றனர். பேரணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரிகார்டு மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT