தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - விவரம்

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

புதுச்சேரி ,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேவேளை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபையின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை இங்கு காண்போம்.

புதுச்சேரி : (30 தொகுதிகள் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகள்)

ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி - 15 முதல் 17 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் கூட்டணி - 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி

தவெக கூட்டணி - 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0 முதல் 1 தொகுதியில் வெற்றி

பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி - 16 முதல் 19 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் கூட்டணி - 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி

தவெக கூட்டணி - 0 தொகுதி

மற்றவை - 1 முதல் 2 தொகுதிகள் வெற்றி

ஆக்சஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி - 16 முதல் 20 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் கூட்டணி - 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றி

தவெக கூட்டணி - 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 1 முதல் 3 தொகுதிகளில் வெற்றி

காமாக்யா அனலிடிக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி - 17 முதல் 24 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் கூட்டணி - 4 முதல் 7 தொகுதிகளில் வெற்றி

தவெக கூட்டணி - 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0 முதல் 1 தொகுதியில் வெற்றி

பிரஜா போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி - 19 முதல் 25 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் கூட்டணி - 6 முதல் 10 தொகுதிகளில் வெற்றி

தவெக கூட்டணி - 0 தொகுதி

மற்றவை - 0 தொகுதி