புதுச்சேரி,
புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வியாழக் கிழமை) நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிக்கு இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.