புதுச்சேரி:
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி, தான் போட்டியிட்ட தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகத்தைவிட 4441 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ரங்கசாமி (என்ஆர் காங்கிரஸ்) - 10024
விநாயகம் (நேயம் மக்கள் கழகம்) - 5583
சேது என்ற சேதுசெல்வம் (சுயேட்சை) - 3984
வைத்திலிங்கம் (காங்கிரஸ்) - 2990
கார்த்தி குமாரி (நாம் தமிழர் கட்சி) - 534
கணேசமூர்த்தி (சுயேட்சை) - 89
பங்காரம்மாள் கருணாகரன் (சுயேட்சை)- 73
ரஞ்சித் குமார் (சுயேட்சை) - 48
கதிரேசன் (சுயேட்சை) - 42
கிருஷ்ணமூர்த்தி (சுயேட்சை) - 15.
நோட்டாவுக்கு 196 பேர் வாக்களித்துள்ளனர்.