தேசிய செய்திகள்

புதுச்சேரி: கேளிக்கை விடுதிகளில் போதைப்பொருள் - போலீசார் அதிரடி சோதனை

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடனத்துடன் கூடிய கேளிக்கை விடுதிகள் மற்றும் ரெஸ்ட்ரோ பார்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

தீவிர சோதனை

விடுதிகளின் அறைகள், நடன அரங்குகள், சமையலறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் விதிகளை மீறி போதைப்பொருட்கள் விற்பனை செய்தாலோ, அரசு நிர்ணயித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

வார இறுதி நாட்கள்

இந்த சோதனை தொடர்பான வீடியோ காட்சிகளை புதுச்சேரி போலீசார் வெளியிட்டுள்ளனர். வார இறுதி நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT