புனே,
மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருபெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, பல்வேறு வகையில் சித்திரவதை செய்து வந்த பிரபல போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவருடன் பெண் சீடர்கள் உள்படகூட் டாளிகள் 7 பேர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் சித்திரவதை செய்த சாமியார், சிறுநீரை அருந்த செய்த அவலமும் நடந்துள்ளது.
அரியானாவைச் சேர்ந்த ராதாமோகன்மிஸ்ரா (வயது 59) என்ற போலி சாமியார், கடந்த எட்டு ஆண்டுகளாக புனேவில் உள்ள கராடி வாகோலி பகுதியில் உள்ள மாடர்ன் குருலம் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். தன்னிடம் அமானுஷ்ய (வினோத) சத்திகள் இருப்பதாக மக்களை நம்ப வைத்த இவர், உடல்நலம், பணப் பிரச்சினை மற்றும் குடும்பச் சிக்கல்களை தீர்த்து வைக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதாகக் கூறி பக்தர்களை நம்ப வைத்திருக்கிறார்.
இவரது பக்தர்கள் இவரை ராதேஷ் யாம் என்று அழைக்கின்றனர். தன்னை கடவுளின் அவதாரம் என்றுகூறிக் கொண்ட சாமியார், தன்னை நம்பி வந்த ஒரு பெண் பக்தரிடம் கைவரிசையை காட்டியுள்ளார்.
42 வயதுடைய பெண் ஒருவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பங்களாவில் சிறைவைத்து, பாலியல் வன்கொடுமை, சித்திரவதை செய்தல், மற்றும் மிரட்டி பணம் மற்றும் சொத்துகளை பறித்தது போன்ற கொடூர செயல்களில் சாமியார் ஈடுபட்டதாக புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாமியாரால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலி போலீசார் சாமியார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புனேவின் சின்ஹகாட் சாலை பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒரு முன்னணி கார்ப்பரேட் ஐ.டி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்துவந்துள்ளார். அவர் அளித்துள்ளபுகாரில் கூறப்பட்டுள்ள தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தசாமியாருடன் தொடர்பில் இருந்துள்ளனர். குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறிய சாமியார் ராதாமோகன் மிஸ்ரா, அந்த பெண்ணை மூளைச்சலவை செய்து அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வைத்துள்ளார்.
அதன் பிறகு, அவர் கண்காணிப்பில் தன்னுடைய பங்களாவிலேயே அந்த பெண்ணை தங்க வைத்த சாமியார். மெல்ல மெல்ல அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கத் தொடங்கி உள்ளார்.
கடந்த 16 முதல் 17 ஆண்டு காலமாக அந்த பெண்ணை சாமியார் பல வகையில் சித்திரவதை செய்து வந்துள்ளார், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதுடன், எலக்ட்ரிக்க்ஷாக் கொடுப்பது (மின்சாரத்தை பாய்ச்சி துன்புறுத்துவது) கட்டாயப்படுத்தி சிறுநீர் அருந்தச் செய்வது போன்ற கொடூரமான அருந்தச் செயல்களை சாமியார் செய்துள்ளார்.
அந்த பெண் இந்த கொடுமையில் இருந்துவிடுபட முயற்சி செய்தபோதெல்லாம் அகோரி போல மாறி, மாந்திரீக சித்து விளையாட்டுகள்செய்துமிரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், பெண்ணின்குடும்பத்தினரையே சாமியார் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. அந்த அளவுக்கு அந்த பெண்ணுக்கு உளவியல் பிரச்சினை இருப்பதாகக் கூறி சாமியார் அந்த பெண்ணின் குடும்பத்தினரை நம்பவை வைத்துள்ளார்.
அந்த பெண்ணை மிரட்டி அவர் மீது உள்ள சொத்துகளையும் ஏமாற்றி தன் பெயரில் எழுதிக் கொள்ள சாமியார் முயன்றிருக்கிறார்.
சாமியாரின் வற்புறுத்தலின் பேரில் அந்த பெண்மணி தனது சில சொத்துகளை சாமியார் பெயரில் மாற்றி எழுதிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்திலையில் பல ஆண்டுகள் கொடுமைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்மணி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, புனே காவல் துறை கடந்த ஜூன் 16 நள்ளி ரவில் சாமியாரின் பங்களாவில் புகுந்து அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டது. 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாமியாரின் ஆசிரம பங்களாவின் அடியில் ரகசிய சுரங்கப் பாதையும். ஒரு ரகசிய நிலத்தடி அறையும் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் பெண்ணுக்கு எலக்ட்ரிக்ஷாக் கொடுக்க வைத்திருந்த மின் சாதனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையின் போது 12 லேப்டாப்கள், 12 ஹார்ட் டிஸ்க்குகள், 11 மொபைல் போன்கள். சி.சி.டி.வி. கேமரா பதிவுகள், பென் டிரைவ்கள் மற்றும் கோட்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள நகைகள். துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களில் முக்கிய ஆதாரங்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப் பெண்ணின் தனிப்பட்ட வீடியோக்களும் அதில் உள்ளன.
இதையடுத்து முதன்மைக் குற்றவாளியான சாமியார் ராதாமோகன் மிஸ்ரா, அவளது முக்கிய கூட்டாளி 'சுவாமி' கன்வல் நயன் (வயது 68) மற்றும் ஆசிரமப் பெண் ஊழியர்கள் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெண்ணின் சொத்துகளை ஏமாற்றியதால் மோசடி மற்றும் ஏமாற்றுதல் தொடர்பான பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் எடுப்பதாகக் கூறி ஏமாற்றும் போலி சாமியார்கள் மீது மூட நம்பிக்கை தடுப் புச்சட்டத்தின்கீழ் அண்மைக் காலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
சாமியாரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின்படி, கடந்த 2001 முதல் 2026 வரை அரியானா மற்றும் புனேவில் பல்வேறு இடங்களில், சாமியார் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட தாகக்கூறப்படுகிறது. புனேவை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணைப் போல பக்தர்களாக இருந்த வேறு பெண்கள் எவரேனும் சாமியாரால் பாதிக்கப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டியத்தில் சாமியாரால் பெண்ணை 14 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.