தேசிய செய்திகள்

பஞ்சாப்: போலீஸ் இன்ஸ்பெக்டரிடமிருந்து 3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

6 துப்பாக்கிகள், 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சண்டிகர்,

பஞ்சாப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடமிருந்து 3 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்ட உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பல்தேவ் சிங்.

போதைப்பொருள் பறிமுதல்

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பல்தேவ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு பெரோஷா பகுதியில் காரில் சென்ற இன்ஸ்பெக்டர் பல்தேவை போலீசார் இடைமறித்தனர்.

அவரது காரை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ கொகேன் போதைப்பொருள், 6 துப்பாக்கிகள், 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பல்தேவை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT