சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியை சேர்ந்தவர் சந்தியா கவுர் (வயது 36). இவருக்கு திருமணமாகி கணவரும், 3 குழந்தைகளும் இருந்தனர். இதனிடையே, சந்தியாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்குமுன் உயிரிழந்தார். கணவனை இழந்த சந்தியா தனது தாயார் வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், சந்தியா கவுர் நேற்று மாலை வீட்டில் இருந்த 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். ஒரு குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற சந்தியா எஞ்சிய 2 பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு சந்தியா தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.