மேற்கு வங்காளத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் முறையே சஞ்சிதா பிரதான், ரபியுல் ஆலம் சவுத்ரியை வேட்பாளர்களாக திரிணாமுல் காங்கிரசின் மம்தா அணி அறிவித்தது. அதன்படி இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சஞ்சிதா பிர தான் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இதைப்போல ரபியுல் ஆலம் சவுத்ரியும் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று காலையில் அறிவித்தார். தங்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் புதி தாக வழங்கிய கால்பந்து வீரர் சின்னத்தை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம் எனவும், தொடர்ச்சியான துன்புறுத்தலை சந் தித்து வரும் களப்பணியாளர்களை ஊக்குவிப்பது சிரமம் என்றும் கூறினார். எனினும் சில மணி நேரத்தில் தனது முடிவை அவர் மாற்றிக்கொண்டார். அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அவர் கூறும்போது, 'கட்சித்தலைவர் (மம்தா) தலையிட்ட பிறகு, காவல்து றையினர் எனக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். தேர்தல் களத்திலிருந்து விலக வேண்டாம் என்று எங்கள் தலைவர் அறிவுறுத்தினார். பிரசாரத்தின் போது எனக்கும் எனது தொண்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க போலீசாரும் உறுதியளித்துள்ளனர்' என்று கூறினார்.