தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ராகுல் பிரசாரம் ரத்து; திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

உள்ளூர் நிர்வாகமும், போலீசாரும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது.

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறியுள்ளது.

கொல்கத்தா நகரில் நடக்க இருந்த ராகுல் காந்தியின் பேரணிக்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனுமதி மறுத்து விட்டது. செவ்வாய் கிழமை மாலை 6 மணி வரை உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என காத்திருந்தோம். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டை தெரிவித்தது.

உள்ளூர் நிர்வாகமும், போலீசாரும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது. ராகுல் காந்தி, மால்டாவிலும், முர்ஷிதாபாத்திலும் நடத்திய பேரணிகளை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் மிரண்டு போய் விட்டன என மாநில காங்கிரஸ் தலைவர் சுபாங்கர் சர்கார் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.