புதுடெல்லி,
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி,
அமித்ஷாவும், மோடியும் கற்பனை உலகில் வாழ்கின்றனர். அவர்கள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாதது போல் உள்ளார்கள். அவர்கள் தங்கள் சொந்த உலகில் வாழ்கிறார்கள். நாட்டின் இன்றைய பெருளாதார நிலைக்கு அவர்களின் கற்பனையே காரணம். அதனால் தான் நாடு இத்தகைய சூழலில் சிக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.