தேசிய செய்திகள்

மாணவர்களை மன்னித்து விட்டதாக கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி

இந்திய மாணவர்களை இவர் மன்னிக்க தேவையில்லை. இவருக்குத்தான் மாணவர்களுடைய மன்னிப்பு கிடைக்க வேண்டும்

புதுடெல்லி,

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, தன்னை பற்றி அவதூறாக பேசிய மாணவர்களை மன்னித்துவிட்ட தாக பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் இரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக மக்களவை எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதி வில், “ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து துயருறுவதைப் பார்ப்பதை விட வேதனையானது வேறு எதுவும் இல்லை.

இழக்கப்படும் ஒவ் வொரு இளம் உயிருக்கும் பின்னால், அவர்களை விட்டு நீங்காத வலியைச் சுமக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. சீர்கெட்ட கல்வி முறையைப் பற்றிய தீவிரமான கேள்விகள் எழுகின்றன. கசிந்த வினாத்தாள்கள், ரத்து செய்யப் பட்ட தேர்வுகள் என பல ஆண்டுகாலத் தயாரிப்பு ஒரே இரவில் அழிக்கப் பட்டது. நேர்மையாக இல்லாத ஒரு அமைப்பில், மாணவர்கள் நேர்மையாக இருக்கச் சொல்லப்படுகிறார்கள். ஆனால் பிரதமரோ, மாணவர்களை "மன்னிப்பது" பற்றி பேசும் துணிச்சலைக் கொண்டிருக்கிறார்.

துயருறும் ஒரு பெற்றோரைக்கூட அவர் சந்தித்ததில்லை. கசிந்த வினாத்தாளால் எதிர்காலம் திருடப்பட்ட ஒரு மாணவருடன்கூட அவர் அமர்ந்து பேசியதில்லை. இந்திய மாணவர்களை இவர் மன்னிக்க தேவையில்லை. இவருக்குத்தான் மாணவர்களுடைய மன்னிப்பு கிடைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.