தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியை ராகுல்காந்தி மூழ்கடித்து வருகிறார் - முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியை ராகுல்காந்தி மூழ்கடித்து வருகிறார் என்று முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.

போபால்,

மத்தியபிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. திகம்கர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-மந்திரி சவுகான் கலந்து கொண்டார்.

அப்போது, பஞ்சாப் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை அவர் விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்து வருகிறார். நன்றாக நடந்து கொண்டிருந்த பஞ்சாப் அரசை சீரழித்து விட்டார். அவர் இருக்கும்வரை, பா.ஜனதா எதுவும் செய்ய வேண்டியது இருக்காது. அவரே எல்லாவற்றையும் செய்து விடுவார். சித்துவால் அமரிந்தர் சிங் முதல்-மந்திரி பதவியில் இருந்து இறங்க வேண்டியதாகி விட்டது. அதன்பிறகு சித்துவே விலகி ஓடிவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT