புதுடெல்லி,
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அரசமைப்பு மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை காப்பதற்கான நமது உறுதிப்பாடு தொடரும்.
நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை காப்பதற்கான போராட்டம் இது. வெற்றிபெறும் வரை நாம் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என அதில் பதிவிட்டுள்ளார்.