தேசிய செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்க்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

முதல்-அமைச்சர் விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

புதுடெல்லி,

முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்

சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, அரசியலிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, தற்போது தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவர் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தி வாழ்த்து

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உங்கள் முயற்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியத்தை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதிலும் நான் உங்களுடன் துணை நிற்கிறேன்." என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.